1150 x 80 px

 

கழுத்தறுப்பதாகக் கூறிய லண்டன் அதிகாரி பணி நீக்கம்

பெப்ரவரி 4ஆம் திகதி அதாவது இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்த இடத்திற்குச் சென்ற உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி கழுத்தை அறுப்பதாகக் கூறும் வகையில் சைகை செய்து அச்சுறுத்தியிருந்தார்.

இவரை பதவி நீக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான ஆலோசனைகள் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பான தகவல்களை இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த 2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடகக்குறிப்பை கீழே காணலாம்.

UK Letter

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top