1150 x 80 px

 

உதயங்கவை கொண்டுவர வெளிவிவகார அமைச்சர் டுபாய் பயணம்

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்த சிக்கலைத் தீர்க்க முடியுமா என்பதை ஆராய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று டுபாய் நோக்கிப் பயணமாகியுள்ளார்.

திலக் மாரப்பன, முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் முன்னாள் சட்டமா அதிபராக பதவி வகித்திருந்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலும் இரு அதிகாரிகள் ஏற்கனவே டுபாய் பயணமாகியுள்ளனர்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவும் டுபாய் சென்றுள்ள குழுவுடன் பயணிக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், வேறு சில காரணங்களினால் அவரது பயணம் இரத்தாகியுள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக இலங்கை - டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜாந்திர நெருக்கடியை ஏற்படுத்தும் விவகாரமாக தற்போது மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top