1150 x 80 px

 

வெற்றியைக் கொண்டாடும் மொட்டுக் கட்சி : தலைமையகத்தில் ஆரவாரம் (வீடியோ)

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளிவருவதற்கு முன்னதாகவே மொட்டுச் சின்னத்தின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஆரவாரமாக ஆதரவாளர்கள் செயல்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்தத் தேர்தலின் தேர்தல் பணிகளை முழுமையாக முன்னெடுத்த பசில் ராஜபக்ச அந்த அலுவலகத்தில் வேலைப் பளுவாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு 65 வீதமான அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரியவருகிறது.

இதனை அறிந்துகொண்ட ஜனாதிபதி, பிரதமர் பதவியை ஏற்குமாறு மகிந்த ராஜபக்சவிற்கு தூது அனுப்பியிருந்த போதிலும் இந்த கோரிக்கையை பசில் ராஜபக்ச நிராகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top