1150 x 80 px

30 வீதம் பெற்ற ரணில் விலக வேண்டுமாயின் 15 வீதம் பெற்ற ஜனாதிபதி அதற்கு முன் விலக வேண்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது எனக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று (13) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவசரமாக கூடி ஆராய்ந்தது. இந்தக் கூட்டம் மலிக் சமரவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 30 வீதம் பெற்ற ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமாயின் 15 வீதம் பெற்ற ஜனாதிபதி அதற்கு முன்னர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருமித்து கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை அகற்ற வெளிச்சக்திகள் பல ஊடகங்களைப் பயன்படுத்தி, அரசியல் நகர்வுகளையும், கருத்தியல்களையும் மேற்கொள்ள முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இடையே நேற்று (13) இரவு பேச்சுவார்த்தையொன்று நடந்துள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பினருக்கு ஜனாதிபதி சவால் ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (14) மாலைக்கு முன்னர் தனியான அரசாங்கமொன்றை ஸ்தாபித்துக் காட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாளை (15) நாடாளுமன்றம் கூடும் தினம் என்பதால், ஐக்கிய தேசியக் கட்சி இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையே அனைவரும் அவதானித்து வருகின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top