1150 x 80 px

 

இது திலங்க சுமதிபாலவினால் ''கட்டணம் செலுத்தப்பட்ட'' அறிவித்தல்

தேசிய அரசாங்கத்தில் இரு(ந்து விலகுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக திலங்க சுமதிபால சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததாக பொய்யான செய்தியொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக திலங்க சுமதிபாலவை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. பொய்யான செய்தியொன்றை பிரசுரித்துவிட்டு, மக்களைக் குழப்பத்தில் தள்ளிவிட்டு அவர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கக் கூடும்.

குறித்த செய்தியில் மேலும், பிரதமர் பதவி குறித்து உயர் நீதிமன்றித்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை வேறுபல ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

''நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என, அக்கட்சியைச் சேர்ந்தவரும் நாட்டின் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால, இன்று (18) இரவு தெரிவித்தார். அதேபோல், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைத் தெரியப்படுத்தியுள்ளதாக, சு.க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் தெரிவித்தார். இதைத் தவிர, புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்தை, ஜனாதிபதி கோருவாரெனவும், திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.''

இவ்வாறான அறிக்கைகள் மூலம், ஜனாதிபதியிடம் நற்பெயரைப் பெற்றுக்கொள்ள பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால முயற்சிப்பது கவலைக்குரியதாகும். 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திலங்க சுமதிபால மக்களின் நிராகரிக்கப்பட்ட ஒருவர் என்பதை அனைவரும் அறிவோம். மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், இவ்வாறு மக்களின் கருத்துக்களுடனும், அவர்களின் எண்ணங்களுடன் விளையாடுவது மிகவும் அபாயகரமானது.

திலங்க சுமதிபாலவுடன் கூட்டிணைந்து செயல்படும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட இரண்டு பக்கமும் பாய்ந்து விளையாடுபவர்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவர். விசேடமாக மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் மேடைகளில் தயாசிறி ஜயசேகர, தற்போதைய ஜனாதிபதியை நகைப்பிற்குள்ளாக்கியமை அனைவருக்கும் நினைவிருக்கும். இதனை தயாசிறி ஜயசேகர எம்.பி. மறந்திருந்தாலும். மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு போலியான செய்திகளை திட்டமிட்டு வெளியிடும் திலங்க சுமதிபால குறித்து பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. பிரதி சபாநாயகராக அவர் பதவி வகித்தாலும், அவரின் பொறுப்புக்களில் இருந்து விலகிச் செயல்படுவதை இதன்மூலம் காண முடிகிறது.

உண்மையாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக இன்று (19) நண்பகல் 12 மணிக்கே கூடிய ஆராயவுள்ளனர். எனினும், திலங்க சுமதிபால திட்டமிட்டு சில போலிச் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

மிகவும் சுருக்கமாக கூறுவதாயின், திலங்க சுமதிபால நேற்று இவ்வாறு போலியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதனால், இவ்வாறான போலி செய்திகளை ''கட்டணம் செலுத்தி வெளியிடப்பட்ட அறிக்கை'' என்று குறிப்பிடுவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top