நல்லாட்சியில் வாகன விலை மீண்டும் உச்சம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பு நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி 1000cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. வான் மற்றும் லொறிகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விலை அதிகரிப்பு பற்றிய விபரங்கள் பின்வருமாறு, முச்சக்கர வண்டிக்காக வரி மாத்திரம் 400,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. டொயோட்டா ப்ரியஸ் வகை காருக்கான வரி 3,300,000 ரூபாவில் இருந்து 7,200,000 வரை அதிகரிக்கிறது. நிசான் எக்ஸ் ட்ரயல் 4,000,000 ரூபா வரியில் இருந்து 8,000,000 வரை அதிகரிக்கிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top