சீனி இறக்குமதி வரி 25 சதத்தால் குறைவு

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தைப் பொருள் இறக்குமதி வரி 25 சதத்தினால் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன் மூலம், ஏற்கனவே கிலோ கிராம் ஒன்றுக்கு ரூபா 30 ஆக இருந்த குறித்த வரி, 18ம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரூபா 29.75 ஆக மாற்றமடைகின்றது.

குறித்த வரிக் குறைப்பின் மூலம், சீனி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒரு கிலோகிராம் சீனியின் கட்டுப்பாட்டு விலை ரூபா 95 ஆக அரசு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top