விலையுயர்ந்த ரோல்ஸ் ரெய்ஸ் கார் இலங்கைக்கு !

கொழும்பு சங்கராஜ மாவத்தை தொழிலதிபர் ஒருவரினால் இதுவரை இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட விலையுயர்ந்த கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். ரோல்ஸ் ரெய்ஸ் அதி சொகுசு வாய்ந்த இந்த கார் 158 மில்லியன் ரூபாய் விலைமதிப்புள்ளது என சுங்க திணைக்களத்தின் ஊடாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


குறிப்பிட்ட தொழிலதிபரினால் நேற்று (26) ரோல்ஸ் ரெய்ஸ் கார் சுங்கத் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொண்டுள்ளதுடன் அதற்கு 93 மில்லியன் ரூபா கட்டணவரி செலுத்தப்பட்டுள்ளது.


அனைத்து சொகுசுகளையும் கொண்ட அந்த கார் இரண்டு கதவுகளை கொண்டது. இங்கிலாந்தின் குட்வூட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் 2.5 டொன் எடை கொண்டது எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.    

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top