புளு மவுண்டன்! இன்னுமொரு வேலைத்திட்டம் !

கொழும்பில் அதி சொகுசுவாய்ந்த தொடர்மாடி வேலைத்திட்டமாக கருதப்படும் புளு மவுண்டன் நிறுவனத்தின் எகிலியோன் வேலைத்திட்டம் கடந்த (19)ம் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க கலந்து கொண்டுள்ளார்.


ரூபா 30 பில்லியன் முதலீட்டில் அமைக்கப்படும் இவ்வேலைத்திட்ட 2020ம் ஆண்டு நிறைவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைத்திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே 50 வீதமான வீடுகள் விற்பனையாகியுள்ளது சிறப்பம்சம் என இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதிஹிரான் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


இவ்வேலைத்திட்டம் தொடர்பில் புளுமவுண்டன் நிறுவனம், சிஙக்பூரில் 'பார்மர் என்ட் டர்னர்' மற்றும் உள்நாட்டு அலங்கார நிறுவனமான 'இன்டெக்ஸ்' உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரூபா 2.34 பில்லியன் பெறுமதி வாய்ந்த பம்பலப்பிட்டியில் அமைக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக 50 தொடர்மாடிகளில் 584 வீடுகள் அமைக்கப்படும்.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top