இம்மாத இறுதிக்குள் ஜிஎஸ்பி ப்ளஸ்

இலங்­கைக்கு ஜீ. எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை வழங்­கு­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றிய பாரா­ளு­மன்­றத்தில் வெளி­வி­வ­கார மற்றும் வர்த்­தக அமைச்­சர்கள் குழு­வினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்த மாத இறு­திக்குள் இலங்­கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை கிடைக்­க­ப்பெறும் என பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.

ஐரோப்­பாவின் 28 நாடு­க­ளுக்கு இப்­போது உள்ள சலுகை மூலம்  6600 உற்­பத்­தி­களை எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது ஏற்­று­மதி செய்ய முடியும்.  நல்­லாட்சி அர­சாங்கம் பெற்ற மிகப்­பெ­ரிய வெற்றி இது­வெ­னவும்  அவர் குறிப்­பிட்டார். 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் வழங்­கப்­படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை மீண்டும் இலங்­கைக்கு கிடைக்­கப்­பெறும் வகையில் ஐரோப்­பிய பாரா­ளுமன்­றத்தில் அங்­கீ­காரம் கிடைத்­துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வதுஇ 

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் நாம் மிகவும் கடி­ன­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் இப்­போது ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான அங்­கீ­கா­ரம் ­கி­டைக்­கப்­பெற்­றுள்­ளது. ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் வெளி­வி­வ­கார மற்றும் வர்த்­தக அமைச்­சர்கள் குழு­வினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.  முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாம் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்ள எடுத்த முயற்­சியில் வெற்றி கண்­டுள்ளோம்.  இப்­போது எமக்கு கிடைக்­க­வுள்ள இந்த வாய்ப்­புகள் மூலம் நாட்டின்  வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரித்தல், தொழிற்­சா­லைகள் உரு­வாக்கல் மற்றும் நாட்டின் பொரு­ளா­த­ாரத்தை முன்­னோக்கி கொண்­டு­செல்ல பல­மாக அமையும்.

இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை எமக்கு கிடப்­பதன் மூலம்  9 தொடக்கம் 10 வீத­மான தீர்வை வரி முழு­மை­யாக நீக்­கப்­படும். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இப்­போது வரையில் 28 நாடுகள் உள்­ளன. இவ் அனைத்து நாடு­க­ளுக்கும் எந்­த­வித தீர்வை வரியும்  இல்­லாது எமது ஏற்­று­ம­தியை வழங்க முடியும். குறிப்­பாக எமது நாடு மீன் ஏற்­று­மதி, ஆடைகள் உள்­ளிட்ட உற்­பத்­தி­களை வழங்­கு­கின்றோம். எனினும் இப்­போது உள்ள சலுகை மூலம்  6600 உற்­பத்­தி­களை எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது ஏற்­று­மதி செய்ய முடியும்.  

மேலும் எதிர்­வரும் 21ஆம் 22ஆம் திக­தி­களில் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் நிலையில் இந்த மாத இறு­திக்குள் மீண்டும் எமக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை  கிடைக்கும் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. இப்­போது நாம் மிகப்­பெ­ரிய வெற்­றியை கண்­டுள்ளோம். நல்லாட்சி அரசாங்கமாக நாம் முன்னெடுத்த முயற்சி கள் அனைத்தும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தமையானது மிகப்பெரிய வெற்றியா கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top