ஏற்றுமதியே தேங்காய் விலை ஏற்றத்துக்குக் காரணம்

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் உள்நாட்டு பாவனைக்குப் போதுமானது என்றபோதும், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலேயே உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜயந்த குணதிலக கூறியுள்ளார். 

தேங்காயின் அண்மைக்கால விலையேற்றம் பற்றிக் கூறும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

தேங்காய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நுகர்விற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனாலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளது என்று கூறிய அவர் தேங்காய் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top