ஜனாதிபதி விருது வென்ற John Sea Food (Pvt) Ltd

ஆறு வருட காலத்திற்குள் இலங்கை மீன் ஏற்றுமதிச் சந்தையில் முன்னணி வகிக்கும் John Sea Food (Pvt) Ltd நிறுவனம்

ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருதை வென்றெடுத்துள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இலங்கை ஏற்றுமதித் துறையில் 'கடல் உணவு" ஏற்றுமதிப் பிரிவில் அதிகூடிய வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈடுக்கொடுத்தமைக்கான ஜனாதிபதி விருது இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சுபுன் சலிந்த அவர்களினால் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், Friend of Sea "FDA" Dolphin Safe, SGS  ஆகிய தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், அதிகமான ஏற்றுமதியை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்டு வருகிறது.

ஆரம்பத்தில், மீன்களைக் கொள்வனவு செய்து, அவற்றை கூறுபோட்டு ஏற்றுமதி செய்துவந்த இந்த நிறுவனம் தனது வர்த்தகத்தை மேம்படுத்தி, அமெரிக்க, ஐரோப்பிய தர நிர்ணயத்திற்குப் பொருத்தமாக தொழிற்பேட்டையை ஸ்தாபித்துள்ளது.

தமது வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்தில் கடல் உணவை வழங்கும் நோக்கில், இந்த நிறுவனம் HACCP, BRC தர நிர்ணயத்திற்கமைய, அனுபவமிக்க, திறமையான நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், வெளிநாட்டுச் சந்தையில் தமது நற்பெயரை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

வருடாந்த இலாபத்தில் குறிப்பிட்ட தொகையை சமூக பணிகளுக்காக ஒதுக்கும் John Sea Food நிறுவனம், கடல்சார் பாதுகாப்பிற்காகவும் தமது பங்களிப்பைச் செய்கிறது. சட்டரீதியான மீன்பிடித் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதுவும் ஜனாதிபதி ஏற்றுமதியாளர் விருதைப் பெறுவதற்கு ஏதுவாக அமைந்ததாக இந்த நிறுவன உரிமையாளரும், நிர்வாகப் பணிப்பாளருமான சுபுன் சலிந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிதித் திட்டமிடல் நிர்வாகியாக முக்கிய பணியாற்றிவரும் ஆர்.ஸ்கந்தராஜா அவர்களே, ஜனாதிபதி விருதை வென்றெடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

JohnSeaFood 12

JohnSeaFood 13

JohnSeaFood 14

JohnSeaFood 15

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top