1150 x 80 px

 

மத்திய வங்கியின் கட்டுப் பாட்டில்  இரு முக்கிய நிறுவனங்கள்

சுவர்ணமஹால் மற்றும் ஈ.ரீ.ஐ. பினான்ஸ் லிமிட்டட் ஆகிய இரு நிறுவனங்களினதும் நிதி தொடர்பான செயற்பாடுகள் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பதற்கு சிறப்பு நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு நிறுவனங்களிலும் காணப்படும் ஒழுங்கற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி தளம்பல் நிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இரு நிறுவனங்களிலும் காணப்படும் பிரச்சினைகளை சீரமைத்து அவற்றை மேம்படுத்தும் நோக்கிலேயே மத்திய வங்கி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் குறைபாடுகளுடன் பயணித்தால் மேற்படி இரு நிறுவனங்களும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென குறிப்பிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இப்பிரச்சினைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top