1150 x 80 px

 

ரெனோல்ட் குவிட் ஸ்பெஷல் இந்தியாவில் அறிமுகம்

ரெனோல்ட் இந்தியா நிறுவனத்தின் 2018 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் ரூ.2.66 லட்சம் முதல் தொடங்கும் புதிய 2018 குவிட் மூன்று மொடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ரெனோல்ட் குவிட் 0.8 லிட்டர் ஆவு, 1.0 லிட்டர் ஆவு மற்றும் 1.0 லிட்டர் யுஆவு மாடல்கள் முறையே ரூ.2.66 லட்சம், ரூ.3.57 லட்சம் மற்றும் ரூ.3.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் ரெனால்ட் பத்து புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில் புதிய குவிட் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. கட்டம்போட்ட பேட்டர்ன் மற்றும் ஸ்பீட்ஸ்டெர் கிராஃபிக்ஸ் காரின் ஹூட், ரூஃப், ஷோல்டர் லைன் மற்றும் காரின் உள்புறம் வரை செல்கிறது. இத்துடன் பிரத்யேக ஸ்டைலிங் கிடைக்க அருமையான நிறங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சர், புதிய குவிட் 2018 எடிஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட மீடியா இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top