1150 x 80 px

 

வலுவான சக்தியாக மாறியுள்ள சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி

விரைவான பூகோள மயமாக்கலுக்கு அமைய சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி வலுவான சக்தியாக மாறியுள்ளதென கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து பூகோள சந்தையை வெற்றி கொள்வதே இலக்காகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலும் நுண்நிதித் துறையிலும் பத்து தொழில் முயற்சியாளர்கள் நாட்டில் உள்ளார்கள். நாட்டிலுள்ள இந்த முயற்சியாளர்கள் 45 சதவீத தொழில்வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள்.

மேலும் மொத்த தேசிய உற்பத்திக்கு இவர்களே 52 சதவீதமான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top