பாடகர் ஷக் பெரி காலமானார் !

பிரபல ரொக் என்ட் ரோல் பாடகர் ஷக் பெரி நேற்று (18) தனது 90 வது வயதில் காலமானார் என அமெரிக்க மிசுரி மாநில பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பாடகர் நேற்று இறந்துள்ளதுடன் அநாதரவான நிலையில் மீட்கப்பட்டதாக சென் சாள்ஸ் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷக் பெரி கடந்த 7 தசாப்தங்களாக கிளாசிக் மற்றும் ரொக் என்ட் ரோல் இசை வடிவங்களை வெளியிட்டு வந்தார். பீத்தோவன் மற்றும் ஜொன்னி பி.கூடே ஆகியோரின் இசை வடிவங்களை உள்வாங்கி தனது படைப்புகளை பெரி வெளியிட்டார். அவர் 1984 ஆம் ஆண்டு வாழ்நாள் விருதாக கிரமி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top