தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் அருண்விஜய் !

'தடையறத்தாக்க' படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க உள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார்.  அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகிஇ மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஹகுற்றம் 23'. இப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

இந்நிலையில்இ அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தையும்இ தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இப்படத்தை அருண் விஜய்யை வைத்து ஹதடையறத்தாக்க' என்ற ஆக்ஷன் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார்.


'என்னை அறிந்தால்', 'குற்றம் 23' போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த அருண் விஜய்,  இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த ஹதடையறத்தாக்க' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top