இந்தியா - இலங்கை இறுதி டெஸ்ட் போட்டி இன்று !

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதி  டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலே மைதானத்தில் இன்று (12)  இடம்பெறுகின்றது.  முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 


இந்நிலையில் தொடரை முழுமையாக இழக்காமல் இருக்கும் வகையில் இலங்கை அணி வீரர்கள் இந்தப் போட்டியின் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top