குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம்  மரணம் !

மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் தனது 79 வயதில் நேற்று (15)  சென்னையில் காலமானார். 


கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ம் ஆண்டு  வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்றுகணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 


அன்பானவன் அசராதவன் அடங்காதவன்  தான் கடைசியாக வெளிவந்த அவரது படம். மேலும் அண்ணாமலை, அரசி, செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர்.   அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்க்கும் நடிகர் சமூகத்திற்க்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top