கிரிக்கெட்டில் வெற்றிபெற அரவிந்தவிடம் ஆலோசனை !


இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளிலிருந்து வெற்றிப்பாதையில் செல்வதற்கு, ஆலோசகராக முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வாவை நாடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.


அதன் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகளுக்கான பொறுப்பு, அரவிந்தவுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.  முதற்கட்டமாக,  இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணி,  இவருக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

அரவிந்த டி சில்வா,  2010-2011 காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராகவும் பின்னர் அணியின் வழிகாட்டுநராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இதன்படி, அப்போட்டிகளின் பயிற்றுவிப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும்,  அரவிந்தவுக்குக் கீழ் பணியாற்றும்படி செய்யப்படவுள்ளது.

 

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top