மீண்டும் விவேகம் கூட்டணி? அஜித்தின் அடுத்த படம்

ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு இணையாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'விவேகம்'. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'விவேகம்' ஒரு பக்கம் பாராட்டையும், இன்னொரு பக்கம் நெகட்டிவ்வான விமர்சனத்தையும் எதிர்க்கொண்டது. ஐரோப்பாவில் நடந்த படப்பிடிப்பின்போது அஜித், விவேக் ஓபராய் இடம்பெறும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அஜித்தை ஓபராய் தாக்குவதுபோல் காட்சி எடுக்கப்பட்டபோது துரதிஷ்டவசமாக அருகில் இருந்த பாறையின்மேல் அஜித் உடல் மோதியது. அப்போது வலியால் துடித்த அஜித்க்கு அங்குள்ள டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் தற்காலிகமாக அந்த வலியை சமாளித்துக் கொண்டார். சென்னை திரும்பியபிறகு வலிமிகுந்த இடத்தில் ஆபரேஷன் செய்து கொண்டார், அஜித்.

ஆபரேஷன் முடித்து அஜித் நார்மலானவுடன், அவரது அடுத்த படத்திற்காக பேச்சு துவங்கி விட்டது. ’வீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் - சிவா காம்பினேஷனில் உருவாகும் நான்காவது படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்கிறது' என்கிற செய்தியை ஏ.எம்.ரத்னத்தின் மருமகளும், திரைப்பட பாடகியுமான ஐஸ்வர்யா கிருஷ்ணா தெரிவித்திருப்பதாக செய்தி பரவியது. ஊடகங்களில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை உண்மை போல் ஊர்ஜிதப்படுத்தினர். இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா கிருஷ்ணா, 'அஜித்சாரோடு அடுத்த படத்திலும் சிவாசார் காம்பினேஷன் தொடரும் என்பதுபோல் செய்திகள் வருகின்றன. அஜித்சார் அழைத்து வாய்ப்பு கொடுத்தால் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என்று நான் சொன்னதை அடுத்தப்படத்துக்கு நாங்கள்தான் தயாரிப்பாளர் என்று நான் உறுதியாக சொன்னதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை, இது தவறாக வெளியிடப்பட்ட செய்தி' என்று மறுத்தார்.

'விவேகம்' குறித்த விமர்சனங்களால் அஜித் - சிவா இருவருக்கும் மனக்காயம் ஏற்பட்டது. இன்னொரு படத்தில் இருவரும் இணைந்து வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற வெறி அஜித் - சிவா இருவரிடமும் மிகுந்து இருக்கிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top