1150 x 80 px

 

2.0 படத்தின் பாடல் 27ம் திகதி வெளியீடு

2010 இல் வெளியாகி வசூல் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். ரஜினிகாந்த், எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார்.

இந்த படத்தை ரூ.400 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் இது. 2015 இல் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு வருடங்களாக நடந்துள்ளது. வெளிநாடுகளில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பல கோடி செலவில் அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.

3டி தொழில்நுட்பத்தில் 2.0 தயாராகி உள்ளது. சமீபத்தில் 3டியில் தயாரான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்த பணிகளில் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் இந்த படம் வரும் ஜனவரி 25 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் வருகிற 27 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது. விழாவுக்கு ரூ.12 கோடி செலவிடப்படுகிறது. விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி நடக்கிறது.

துபாய் மால்களில் ஒன்றரை லட்சம்பேர் டெலிவி‌ஷன்களில் நேரடியாக பாடல் வெளியீட்டை காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top