1150 x 80 px

 

பிரபுதேவா, பூமிகா நடித்த களவாடிய பொழுதுகள் திரைக்குத் தயார்

நடிகராக திரையில் வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா பின்பு டான்ஸ் மாஸ்டராக வளம் வந்தார். கோலிவுட் சினிமாவில் பல படங்களில் கலக்கிய பிரபு தேவா, திடீரெண்டு பாலிவுட் சென்றார் அங்கேயும் வெற்றி படங்களை கொடுத்து வந்த அவர் ராசி போனதோ தெரியவில்லை கடைசியில் படங்கள் தோல்வி பெற ஆரம்பித்துவிட்டது.

பின் மீண்டும் தமிழ் சினிமாவில் தேவி படம் மூலம் நாயகனாக நடிக்க வந்துவிட்டார். இப்பொது தொடர்ச்சியாக, யங் மங் சங், மெர்குரி, குலேபகாவலி என ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் ஒரு பக்கம் இருக்க சில ஆண்டுகள் முன்பு இவர் நடித்த களவாடிய பொழுதுகள் படம் தற்போது திரைக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக பூமிகா நடித்துள்ளார். கடந்த கால நிகழ்வுகளை உணர்ச்சி மேலிட விவரிப்பது போல் இப்பட கதை அமைத்திருக்கிறது போல.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top