1150 x 80 px

 

குஷ்புவை டார்ச்சர் செய்யும் மர்ம மனிதர் யார்?

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்குபவர். தனக்கு சரியென்று தோன்றுகிற கருத்துக்களை துணிச்சலாக பதிவிட்டு வருகிறவர். கடந்த பல நாட்களாக யாரோ ஒருவன் குஷ்புவை ஏதோ ஒரு வகையில் டார்ச்சர் செய்து வருவதாக தெரிகிறது. அவனைப் பற்றி குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:

"ஒருவன் ரொம்ப படுத்துறான். டேய்... நீ தலைகீழா நின்னாலும் நீ ஒரு லூசுதான். வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு தீயா வேலை செய்யணும் குமாரு. வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்கின மாதிரிதான். போடா ஏதாவது வேலை இருந்தா பாரு. சும்மா இருக்கும்போது மனசு சாத்தானின் பட்டறை. நாங்கள் வரலாறு படைத்து விட்டோம். அதை மாற்ற முடியாது. என்னைப்பற்றி உனக்கு எதுவும் தெரியாது கூஜாராஜா"

இவ்வாறு குஷ்பு டுவிட்டரில் எழுதியுள்ளார்.

யார் அந்த கூஜா ராஜா. அரசியல் தரப்பிலிருந்து டார்ச்சர் செய்கிறவனா? சினிமா தரப்பிலிருந்து டார்ச்சர் செய்கிறவனா என்று தெரியவில்லை. அவன் யார், அவன் பெயர் என்ன? என்று டுவிட்டரிலேயே கேட்டவர்களுக்கு "அந்த லூசு பெயர் குறிப்பிடும் அளவிற்கு மதிப்பானவன் அல்ல" என்று பதில் அளித்திருக்கிறார்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top