1150 x 80 px

 

புதிய சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய்

வாடகை தாயாக மாறப்போகும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1999ம் ஆண்டு சல்மான்கானுடன் காதல் பந்தத்தில் இணைந்திருந்தார். அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு கழித்து இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு பொலிவூட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஆராதயா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் ஐஸ்வரயா ராய் வாடகை தாயாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top