1150 x 80 px

 

வில்லனுக்கு ஜோடியாகும் ஓவியாO

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாயிருக்கும் ஓவியா தனது அடுத்த படத்தில் வில்லன் நடிகருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதைத் தொடர்ந்து. பட வாய்ப்புக்களும், விளம்பர வாய்ப்புக்களும் இவரைத் தேடி வந்தன. தற்போது, ராகவா லோரன்ஸ் உடன் ‘காஞ்சனா-3′ படத்தில் நடித்து வரும் ஓவியா பல படங்களைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, ‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த அசன்பாலுடன் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசன்பால் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருடைய ஜோடியாக ஓவியா நடிக்கிறார்.

அசன்பாலும், ஓவியாவும், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒரே பகுதியில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top