1150 x 80 px

 

விஜய் சேதுபதியின் படங்களை வாங்கிய பிரபல நிறுவனம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில், உருவாகி வரும் இரு படங்களை முன்னணி நிறுவனம் ஒன்று அடுத்தடுத்து வாங்கியுள்ளது.

விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ’96’ ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கின்றது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் ’96’ படத்தில் விஜய் சேதுபதி – த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அத்துடன், காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 தோற்றங்களில் நடிக்கிறார். இந்த 3 வேடங்களிலும் தனித்தன்மையை காட்டுவார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் இரு படங்களை ஒரே நிறுவனம் அடுத்தடுத்து கைப்பற்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருப்பதுடன், காதலர் தினத்தை முன்னிட்டு ’96’ படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top