1150 x 80 px

 

ரசிகர்களின் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது: தீபிகா படுகோனே

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ரசிகர்கள் என்மீது அன்பு வைத்து படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் வெளியான பத்மாவத் படம் குறித்த அவரது டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘என் திரையுலக வாழ்க்கையில் பத்மாவத் முக்கிய படம். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ரசிகர்கள் என்மீது அன்பு வைத்து படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எதிர்ப்புக்கு இடையே ‘பத்மாவத்’ படம் வெளியாகி இந்தியா முழுவதும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் சில திரையரங்குகள் பயத்தில் படத்தை திரையிடாமல் பின்வாங்கிவிட்டன. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top