1150 x 80 px

 

10 மணியுடன் முடிவடைகிறது கடவத்த – கொட்டாவ அதிவேக வீதியின் இலவச பிரயாணம் !

நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கடவத்த – கொட்டாவைக்கு இடையிலான அதிவேக வீதியினூடாக இலவசமாக பயணிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு இன்று இரவு 10 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.


கடும் மழை காரணமாக கடுவெல உட்பட பல பிரதேசங்களின் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்களின் பிரயாணம் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே கடவத்த – கொட்டாவையினூடாக இன்று (17) காலை 10மணிமுதல் இரவு 10மணிவரை இலவசமாக பயணிக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.


இதற்கிடையில் கடுவெல பிரதேசத்தில் நிலிவரும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமா அதிவேக வீதியும் நீரில் மூழ்கியுள்ளதோடு வீதியும் மூடப்பட்டுள்ளது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top