கிரிஸ் நோனிஸிற்கு ஜோதிடம் கூறிய ஹெரி ஜயவர்த்தன!

இலங்கையின் பிரபல கோடீஸ்வரரான ஹெரி ஜயவர்த்தன 2014 நடுப்பகுதியில் ஐக்கிய ராச்சியத்தின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸிடம் ஒரு ஜோதிடம் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தின்போதே ஹெரி ஜயவர்த்தன இந்த ஜோதிடத்தை கிரிஸிடம் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் வீரர் என்று நாடே கிறீஸை போற்றுவதையும் பொருட்படுத்தாது, 'கிரிஸ் ஆ யு மேட்? (கிரிஸ் உனக்கு பைத்தியமா?) தாத்தாவும் அம்மாவும் இணைந்து கட்டியெழுப்பிய மெக்வுட் நிறுவனத்தை நீ உயர்ஸ்தானிகர் பதவி ஏற்றது எதற்காக? மற்றது இந்த அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க உனக்கு வெட்கம் இல்லையா. பைத்தியம் ஆடாமல் உயர்ஸ்தானிகர் பதவியை வீசிவிட்டு வந்து வியாபாரத்தை கவனி. இவர்கள் உன்னை பின்னால் அடித்து விரட்டுவதற்கு முன் நீ வெளியில் வந்துவிடு. இல்லையேல் உனக்கு எதுவும் இல்லாமல் போய்விடும்' என்று ஹெரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிரீஸ் நோனிஸின் கன்னத்தில் அடித்து மஹிந்த அரசு அவரை விரட்டியது. அதன்பின் கிரிஸ் வியாபாரத்தை பொறுப்பேற்க வந்ததும் அதில் காணப்பட்ட குழறுபடியால் அவருக்கும் சகோதரருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

சில காலம் கிரிஸ் - ஹெரி சந்திக்காமல் இருந்து அண்மையில் திடீரென கொழும்பு ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது ஹெரி கிரிஸை நோக்கி பார்த்துள்ளார். 'ஹெரி நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உனது பார்வையில் அதனைத்தும் புரிகிறது' என்று கிரிஸ் கூறியுள்ளார்.

கிரிஸ் நோனிஸின் நிலையானது வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியல் பின்னால் செல்லும் அனைத்து நபர்களுக்கும் ஒரு நல்ல பாடம். கிரிஸ் நோனிஸ் 52 வயதை கடந்துள்ளார்.

Top