விளையாட்டு துப்பாக்கிதாரிக்கு பயந்த அமைச்சர்!

தெற்கில் விளையாட்டு துப்பாக்கிதாரி என போற்றப்படும் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவிந்திர பெனாண்டோ தனது நண்பர் ஒருவருடன் இணைந்து பெட்ரல் செட் ஒன்றை ஆரம்பிக்க உள்ளாராம். நண்பர் நிதி முதலீடு செய்கிறாராம். எராஜ் அரசியல் பலத்தில் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொடுக்கிறார்.

பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திர வீரக்கொடி, எராஜின் பாடசாலை நண்பர் என்பதால் இலகுவில் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் பெட்ரோல் செட் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற சம்பந்தப்பட்ட அமைச்சரவை சந்திக்க எராஜ் சென்றுள்ளார்.

'ஆ... விளையாட்டு துப்பாக்கிதாரி எங்கு இங்கே..?' என்று விளையாட்டாக அமைச்சர் அலுவலர்கள் முன் கேட்டுள்ளார்.

'சிறய வேலை செய்துகொள்ள வந்தேன் அமைச்சரே. ஆ... அதுவல்ல அமைச்சரே.. எங்களது பிளட்டில் நான் உங்களை அடிக்கடி கண்டேன். நான் கதைக்க வெளியில் வந்தபோது நீங்கள் சென்றுவிட்டீர்கள்.'

எராஜின் இந்த கதையை கேட்டு அமைச்சர் தட்டுத் தடுமாறியுள்ளார்.

'எங்கே.. எப்போது.. எந்த பிளட்டில்..?' என அமைச்சர் கேட்டுள்ளார்.

'அமைச்சரே கொள்ளுபிட்டி சென்லோரன்ஸ் வீதியில்..?'

'இல்லை இல்லை நான் அங்கு வருவதில்லை. தெரியவும் தெரியாது. ஏன் என்னை சந்திக்க வந்தீர்கள்? என்ன செய்ய வேண்டும்? என்று கதையை மாற்றினார் அமைச்சர்.

எராஜ் தனது தேவையை கூறியபின் அவரை வெளியில் இருக்கச் சொன்ன அமைச்சர், அலுவலர் ஒருவரை அழைத்தார்.

'அந்த விளையாட்டு துப்பாக்கிதாரியின் வேலையை செய்து கொடுத்து விரைவில் அவரை இங்கிருந்து அனுப்புங்கள்' என்று பணித்துள்ளார். அமைச்சர் தெரியாது என்றாலும் அந்த பிட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் அது சரியாக பரிவாகியுள்ளது.

எப்படி முகமுடி அணிந்து வந்தாலும் உயரம் காட்டிக் கொடுக்கும் என்பதை அமைச்சர் அறிவார். தேசிய உடையை அகற்றி ட்ரெக்கிட், ரீசேர்ட், பேஸ்போல் கெப் அணிந்து வருவது குறித்த அமைச்சர் என பாதுகாப்பு பிரிவினர் மூன்று நாட்களில் கண்டுபிடித்துள்ளனர்.

Top