பூஜிதவுக்கு அமேரிக்க பொலிஸ்மா அதிபராகும் தகுதி!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் போதி லியனகே எழுதிய 'அன்ன ஏக்க ஹரி' நூல் வௌியீடு அண்மையில் மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. அதன் பிரதம அதிதியாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்து கொண்டார். இங்கு உரையாற்றி பிக்கு ஒருவர் 'போதி லியனகே மிகவும் சிறந்த ஊழல் அற்ற திறமையான பொலிஸ் அதிகாரி. மோசடியில் சிக்கியவர் அல்ல. இவர் போன்றவர்கள் கிடைப்பது மிகவும் அரிது' என்றார்.

அடுத்து உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, 'தேரரே நீங்கள் கூறியது மோசம். ஏன் தேரரே இது நான் ஊழல் அற்ற திறமையான மோசடியில் சிக்காத பொலிஸ் அதிகாரி தானே? என்னை பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை?' என்று கேட்டுள்ளார். 'பூஜித்தவிற்கு பிழைத்துவிட்டது என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். ஆனால் நான் இதோ பொலிஸ் மா அதிபர் ஆசனத்தில் உள்ளேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போது சபையில் இருந்தவர் சேர் இவ்வாறு பேச வேண்டாம் பத்திரிகையில் வரும் என்று கூறியவுடன் பத்திரிகைகாரர் நான் வருவதையும் போவதையும் கண்காணிப்பர் என்று பூஜித கூறியுள்ளார்.

செய்தி என்றால் பைக்குள் போட்டுக் கொண்டு செல்வது என பொலிஸார் அதிபர் நினைக்கிறார். அப்போது சபையில் இருந்தவர்கள் இந்த பொலிஸ்மா அதிபர் அமேரிக்காவுக்கே பொருத்தமானவர் என்றும் டொனால்ட் ட்ரம்புட்ன் சேர்ந்தால் சரி என்றும் நாட்டில் கேலிக்கூத்தாடும் இவர் உலகில் கேலிக்கூத்தாட முடியும் என்று முணுமுணுத்தனர்.

Top