கொமிசன் பணம் பற்றி ஜனாதிபதியிடம் பிரதமர் கூறிய கதை!

தற்போது அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகிவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, 'பிரதமரே உங்கள் பின்னால் உள்ளவர்கள் ஒவ்வொரு வேலைத் திட்டங்களில் தரகு பணம் பெறுவதாக தகவல்' என்று கேட்டுள்ளார்.

'பொய் ஜனாதிபதி அவர்களே இது முற்றிலும் பொய்' என்று கூறியுள்ளார் பிரதமர்.

'இல்லை எனக்கு நன்றாக தெரியும் எனக்கு வந்த தகவல் உண்மை. தரகு பணம் பெறுவது முற்றிலும் உண்மை. வேண்டுமானால் நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்' என்று ஜனாதிபதி பதில் அளித்துள்ளார்.

சிறுது நேரம் அமைதியாக இருந்த பிரதமர், ஜனாதிபதியிடம் 'நீங்கள் அதனை நிரூபிப்பதை பொறுப்பெடுக்க வேண்டாம். எமது தரப்பினர் தரகு பணம் பெற நாம் என்ன வேலைத் திட்டம் செய்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களில் நாம் எந்தவொரு பெரிய வேலைத் திட்டமும் செய்யவில்லை. உதாரணத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காரணம் சொல்லி உங்கள் கட்சிக் காரர்கள் வேலைத் திட்டத்தை தாமதப்படுத்தி வருகின்றனர். செய்யாத திட்டத்தில் இருந்து எப்படி எம்மவர் தரகு பணம் பெறுவர்? அதனால்தான் சொல்கிறேன் அந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய். முதலில் எனக்கு வேலைத் திட்டமொன்றை அனுமதித்து தாருங்கள். பின்னர் நான் தரகு பணம் பெறுவதை தடுத்து நிறுத்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த கதையை கேட்ட ஜனாதிபதி, 'அது உண்மைதான்' என்றபடி தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

Top