டோரா படகில் சென்று இடுப்பு வலியால் தவித்த தசாநாயக்க!

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் நேற்று (12) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தமிழ் இளைஞர்கள் 11 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

கைது செய்யப்படப்போவதை சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் அறிந்து கொண்ட தசாநாயக்க வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சென்று தங்கியுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் வைத்தியரிடம் வினவியபோது 'இவருக்கு சொல்லும்படி நோய் இல்லை ஆனால் டோரா படகில் செல்லும் போது இடுப்பு வலிக்கிறதாம்' என்று கூறியுள்ளார். இதனை கேட்டு சிரித்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 'அச்சப்பட தேவையில்லை டொக்டர் நாம் இவரை டோரா படகில் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதில்லை அதனால் பிரச்சினை இல்லை' என்று கூறி கைது செய்துள்ளனர்.

Top