1150 x 80 px

 

கொழும்பு நகரில் 344 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரிலுள்ள 344 உணவகங்கள் மற்றும் ஹொட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹொட்டல் உரிமையாளர்களிடம் இருந்து 11 இலட்சத்து 59 ஆயிரத்து 100 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக, கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி ருவன் விஜயமூனி தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமான ஹொட்டல்களும் உணவகங்களும் புறக்கோட்டையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

95 சதவீதமான ஹொட்டல்களிலும் உணவகங்களிலும் சுகாதார இல்லாமல் உணவுகள் தயாரித்தல், அதனை சேமித்து வைத்தலில் காணப்பட்ட சீர்கேடுகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Top