நீதிமன்ற தடையுத்தரவை மதிக்காத ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்  !

இன்று (7) முதல் 14 நாட்களுக்கு இடம்பெறும் வகையில் ஹம்பந்தொட்ட நீதவான் நீதிமன்ற தொகுதியினுள் ஆர்ப்பாட்டம், நடைபவணி மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரினால் ஹம்பந்தொட்ட முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் நிகழ்வின் அருகில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நிகழ்விற்குஅருகில் உள்ள பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தை நோக்கி கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். இவற்றுக்கிடையிலேயே பிரதமரினால் உத்தியோகபூர்வமாக ஹம்பந்தொட்ட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கா சீன தூதுவர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரதிநிதிகள் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.   

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top