ஹம்பந்தொட்ட ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் !

ஹம்பந்தொட்டயில் இன்று (7) இடம்பெற்ற முதலீட்டு ஊக்குவிக் வலய திறப்புவிழாவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்தன் விளைவாக 21 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


காயமடைந்தவர்களில் பாதுகாப்பு பரிவு அதிகாரிகள் மூவர் அடங்குவதாகவும் அவர்கள் கல்வீச்சுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள் என ஹம்பந்தொட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.


ஹம்பந்தொட்டயில் அமைக்கப்படும் சீனா - இலங்கை தொழில் நகரம் மற்றும் ஹம்பாந்தொட்ட துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு பிரகாரம் மேற்கொண்டமையினால் பொலிஸார் கண்ணீர்புகை பிரகாரம் மேற்கொண்டதன் காரணமாக இவ்வாறு பலர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தொட்ட நீதவான் நீதிமன்ற வலாகத்தில் இன்று (7) முதல் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ கூட்டமோ நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.

hambanthota protest 2

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top