மலையகத்தில் கைத்தொழில் பேட்டைகள் - பழனி திகாம்பரம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பசும்பொன் வேலைதிட்டத்தின் கீழ் வீடுகள் கையளிக்கப்பட்டன.

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டமக்களுக்கு புதிதாக நிர்மானிக்கபட்ட 20 வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்படபோவதாக தெரிவிக்கின்றார்கள், 2020 ஆம் ஆண்டு வரை ஆட்சிமாற்றம் இடம்பெறாது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆட்சி மாற்றம் வந்தால் அமைச்சர் திகாம்பரத்தை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைத்தால் மாத்திரம் எதனையும் செய்ய முடியுமென நினைத்தார்கள் ஆனால் இப்போது திகாம்பரம் நினைத்தால் மாத்திரம்தான் மலையகத்தில் எதனையும் செய்யமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஹட்டன் நகரத்தில் 200 வருடகால பழைமை வாய்ந்த தகரங்களை கொண்டு அமைக்கப்பட்ட கூடாரங்களை அகற்றி வீதிகளை பெரிதாக்கி பாரிய கடைதொகுதிகளை அமைத்து 2020 ஆம் ஆண்டு ஹட்டன் நகரத்தை ஒரு நவீன நகரமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top