தொழில்துறையை பொலன்னறுவைக்கு தாறுங்கள் - மைத்திரி ரணிலிடம் வேண்டுகோள் !

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட சீன - இலங்கை தொழில்துறை ஹம்பந்தொட்டையில் தேவையற்றது எனில் அதனை பொலன்னறுவைக்கு பெற்றுக் கொடுக்குமாறும் அதற்கு தேவையான அளவு நிலம் பொலன்னறுவையில் பெற்றுக் கொடுப்பதற்கு தான் தயார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (8) கொழும்பு பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'பேண்தகு யுகம்' என்ற தொணிபொருளின் கீழ் ஜனாதிபதி 2ம்  இரண்டாம் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.


அத்துடன் தன்னுடன் ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைப்பதற்கு எவரும் தேவையில்லை எனவும் தற்பொழுது உள்ள அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆட்சியை கழிழ்ப்பதாக தெரிவிக்கும் கருத்து பின்நோக்கிச் செல்லாது மக்கள் தனக்கு கொடுத்த செயல்பாடுகளை நிறைவேற்றுவதாகவும் எதிர்கால அதிகாரம் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கும் கருத்து சமூக விரோதம், இன விரோதம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தின் விரோதத்தை தெரிவிக்கும் கருத்தை தான் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் 'பிரதமர் அவர்களே ஹம்பந்தொட்டயில் அந்த தொழிதுறை வேண்டாம் என்றால் அதனை எனக்கு பொலன்னறுவைக்கு தாருங்கள். நான் தயார் பொலன்னறுவையில் இடம் தருவதற்கு. எந்த .டத்திலும் எந்த பூமியையும் நாங்கள் காட்டிக் கொடுத்ததில்லை. 65 வருடங்களுக்கும் அதிகமான காலங்கள் ஒற்றுமையில்லாமல் இருந்த இரு கட்சிகள், அந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து சகோதரத்துவமாக நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்வதென்றால் ஒன்றாக கைதூக்குவதென்றால் சரியில்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இதன் போது இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தின் முதலமைச்சர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.   

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top