சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  இன்று  (9) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில்இ  சரத் குமார தரப்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைஇ கொழும்பு பிரதம நீதவான் லால் பண்டார நிராகரித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டம் ஒன்றில் நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 2ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top