விரைவில் ஆரம்பமாகும் நல்லிணக்க அலைவரிசை !

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு இணையாக உள்ள அலைவரிசையாக நல்லிணக்க அலைவரிசையை விரைவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று இவ் அலைவரிசைக்கு குறிப்பிட்டஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நல்லிணக்க அலைவரிசைக்கா ரூபா 180 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது புதிய அலைவரிசை தொடர்பில் தேவையான அனைத்தும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானஜோதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

இதன்போது கயன்த கருணாதிலக, ரவீ கருணாநாயக்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்ய, கரு பரணவிதான உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ravi karu

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top