ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஆண்டின் சிறந்த நிதி அமைச்சர் ரவி - 'பாங்கர்' சஞ்சிகை

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நாடுகளுக்கிடையில் வருடத்தின் சிற்நத நிதி அமைச்சராக ரவி கரணாநாயக்க என பாங்கர் சஞ்சிகை தெரிவிக்கின்றது. இந்நாட்டின் பொருளாதாரத்தில் மேற்கொண்ட மாற்றத்தின் காரணமாகவும் பொருளாதார போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவும் இந்த தேர்ந்தெடுப்பு இடம்பெற்றுள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய நிதி அமைச்சர் பதவி ஏற்கும் போது இந்நாட்டின் வரவு செலவு கடன் 7 வீதமாக குறிப்பிட்டிருந்ததுடன் அது 2016ம் அண்டில் 5.4 வீதமாக குறைப்பதற்கு முன்வந்துள்ளார். அது மட்டுமின்றி இந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கடன் திட்டத்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்த பாங்கர் சஞ்சிகை இத்தேர்ந்தெடுப்பின் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.


உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணயம் தொடர்பில் அறிக்கையொன்றை பாங்கர் சஞ்சிகை லண்டன் தலைநகரில் அறிவித்துள்ளது.  

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top