நிறைவேற்று அதிகாரம்  நீக்கம் - 2020 ஜனாதிபதி தேர்தல் இல்லை – ராஜித சேணாரத்ன

 'புதிய அரசியலமைப்பின் ஊடாகஇ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவேஇ ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது' எனஇ சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.


யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றிய பிரச்சினை நிலவியிருந்தும் 2010ம் ஆண்டின் பின்னர் அதனை ஒழிக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சரவையில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.  விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் 40 அர வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை காரணமாக அரசாங்கத்திற்கு ரூபா 916 இலட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார் தனது நெருங்கியவர்களுக்கு அரச வாகனங்களை தவறாக பயன்படுத்துவதற்கு பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயல்படும் தற்போதைய ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஆஷமாரசிங்க தவறாக வாகனங்களை பயன்படுத்தவில்லை எனவும் இச்செயல்பாடுகளில் தலையிடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். விமல் வீரவன்சவின் செயல்பாடுகளினால் சுமார் 10 மாதங்களாக ஆஷா மாரசிங்க தனது பதவியிலிருந்து விலகியதாகவும் அமைச்சர் ராஜித சேணாரத்ன தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top