கடந்த ஆட்சியில் கொன்றார்கள் இவ் ஆட்சியில் மறைக்கின்றார்கள் - சிறைக்கைதிகளுக்காக ஆர்ப்பாட்டம்

சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று (14) வெலிக்கடை சிறைச்சாலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிவில் அமைப்புகளின் நடவடிக்கையாளர்கள் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்று சுவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தும் உண்மையிலேயே சிறைக்கைதிகளை மனிதர்களாகவே பார்ப்;பதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அவர்களும் மனிதர்கள் தான் என சுட்டிக்காட்டியுள்ளனர்.


கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைக்கைதிகளுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதில் ஒரு தொகுதியினருக்கு மட்டும் பெற்றுக் கொடுக்காதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சித்த போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரச தரப்பு கூறியிருந்தாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

weli 1

 

weli 12

weli 3

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top