ரஷ்ய - இலங்கை உறவை சீர்குலைக்க சதி

இலங்கை - ரஷ்யாவுக்கு இடையிலான நெருக்கமான உறவினை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசாங்கத்தினால் ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற உறவை நெருக்கப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கெடுப்பதற்காக சிலர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் வீழ்ச்சியடைந்து காணப்படுகினற உறவை மீண்டும் வலுவடைய செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினரான உதயங்க வீரதுங்க இந்த வேலைத்திட்டத்தை குழப்புவதற்கான செயற்பாட்டிற்கு தலைமை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச ஆட்சி காலத்தில் உக்ரேனுடன் இணைந்து மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க இன்னமும் உக்ரைன் நிறுவனங்களின் அவசியத்திற்கமையவே செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மேஷ் என்ற நிறுவனம் இதற்காக பணம் வழங்குகின்ற நிலையில், அதன் ஊடாக ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை சீர்குலைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளுடன் கைசாத்திட்டுள்ள பல ஒப்பந்தங்களை மீறியமையினால் சர்வதேசத்தின் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட ஒரு நிறுவனமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top