மஹிந்த அமரவீரவிற்கு புதிய அமைச்சு - ஜனாதிபதி உறுதி

மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக கடமையாற்றி வரும் மஹிந்த அமரவீரவிற்கு வேறும் அமைச்சுப் பதவி ஒன்றை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ருஹூனுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தங்காலை தொகுதிக்கு மூன்று மீன்பிடித்துறை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீன்பிடித்துறை அமைச்சு பதவிகள் மூன்று தங்காலை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினை என்றால் அதில் மாற்றம் செய்ய முடியும். அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய முடியும்.

மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சராக திலிப் வெதராச்சியும், தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக எச்.டபிள்யூ.குணசேகரவும் கடமையாற்றுகின்றனர்.

இந்த விடயம் எனக்கு இன்றுதான் தெரியும். இந்த மூன்று பேரும் தங்காலை தேர்தலை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்வதனால் அமைச்சரவை அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்படும். ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய பதவியொன்று வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top