கடற்படையினரால் 17 இலங்கை மீனவர்கள் கைது !

புத்தளம் சின்னப்படு கடற்பரப்பில் நேற்று (18) சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 17 இலங்கை மீனவர்களை, கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் சின்னப்படு பகுதியில் 5 படகுகள் மூலம் மீன் பிடியில் ஈடுபட்டவர்களிடையே, முறையான சட்ட அனுமதிப்பத்திரம் எதுவும் இருக்கவில்லை என இலங்கை கடற்படை தரப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் மீன்வளத்துறை உப பணிப்பாளரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடதடகக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top