அதிக வருமானம் ஈட்டிய சதொத !

சதொச விற்பனை நிலையங்கள் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஈட்டிக் கொண்ட வருமானத்தை விட அதிக வருமானத்தை இம்முறை ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் வவுனியாஇ சுதுவென்பிளவு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

இம்முறை பண்டிகை காலத்தின் இதுவரையான காலத்தில் சதொச விற்பனை நிலையத்தின் வருமானம் இரு மடங்காக அதிகரித்துள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 10ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலையில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியவசிய பொருட் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறினார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top