தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை சபை சட்டம் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் தீர்மானம் !
தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை சபையை அமைப்பதற்கான சட்டம் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்ன தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளதுடன் அக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்தில் சுகாதார அமைச்சிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் அடங்கிய அந்த குழு தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் ஆகியோர்; அடங்குவார்கள். பிரித்தானியா அரசினால் உருவாக்கப்பட்டுள்ள தனினார் சுகாதார சேவை குழு அறிக்கையை கவனத்திற் கொண்டு இந்த சட்டம் திருத்தம் செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச வைத்தி இரசாயன பிரிவின் தொழில்நுட்ப மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தினர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது அச்சங்கத்தினர் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் ரூபா 5ழ வரை அதிகரிக்குமாறும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பில் நிதி அமைச்சிடம் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்துள்ளனர். இரசாயன பிரிவின் தொழில்நுட் விஞ்ஞானிகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவில் பயிற்சி வகுப்பு அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை உருவாக்குவதாகவும் சுகாதார அமைச்சர் அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரமவிற்கு அலோசனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம, பணிப்பாளர் நாயகம் ஹெமன்த பெனரகம, பிரதான கணக்காளர் பீ.ராஜபக்ஷ, அரச வைத்திய பிரிவின் தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top