'மீதொடமுல்ல சம்பவத்திற்கு அரசு சார்பாக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்'

இந்த விபத்து இடம்பெறுவதற்கு முன்பே அதற்கான மாற்று இடத்தை கண்டுபிடித்தோம், அந்த இடத்திற்கு செல்ல முன்வந்தோம், இருப்பினும் அந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மதத்தலைவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். சில இடங்களுக்கு நாங்கள் நீதிமன்ற உத்தரவை கூட பெற்றுக் கொண்டிருந்தோம்.


'இந்த குப்பை பிரச்சினை அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. நாங்கள் தகுந்த ஆலோசனைகளை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'


'நாங்கள் முதலில் செய்வது அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது, புலம்பெயர்ந்தவர்களுக்கு தற்காலிகமான வசிப்பிடம் மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு இராணுவத்தினர் மும்முரமாக செயல்படுவதோடு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாங்கள் முடிந்தளவு அனர்த்தத்திற்குள்ளனவர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம்' என சட்டமும் ஒழுங்கும் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர், பிரதமர் அலுவலக முக்கியஸ்தர் அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று (15) மாத்தர – தெவிநுவரவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top